வியாழன், ஜனவரி 19, 2012

நீயெல்லாம் ஒரு மினிஸ்டரா? வேஸ்ட்டு !

Subramanian
 ஆளும் அதிமுக பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தபோது ஆதி திராவிட அமைச்சரைப் பார்த்து ஒரு பெண், நீயெல்லாம் அமைச்சரா, அமைச்சராக இருக்கவே லாயக்கற்றவன்" என்று ஏக வசனத்தில் திட்டியதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
புதுக்கோட்டை நகரத்தில் சின்னப்பா பூங்காவில், அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இதில் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மேடை அருகே வந்தார் புதுக்கோட்டை நகர மகளிர் அணி அதிமுக நிர்வாகி சோனா. அமைச்சரைப் பார்த்து கைகளை நீட்டியபடி மிகவும் கோபமாக பேசிய அவர், அமைச்சரை ஒருமையில் விளிட்த்து "நீயெல்லாம் மினிஸ்டரா இருப்பதற்கே லாயக்கில்லை நீ தொண்டர்களை பார்ப்பதும் இல்லை; மதிப்பதும் இல்லை. நல்லது கெட்டதுக்கெல்லாம் உதவுவதுமில்லை. . புதுக்கோட்டைக்கு வந்தா கூட, கட்சி ஆபீசை எட்டி பார்ப்பதில்லை. வீட்டில் உட்கார்ந்து, வேண்டப்பட்டவர்களை மட்டும் பார்த்துவிட்டு போற உன்னை பற்றி அம்மாவிடம் புகார் சொல்லி, மந்திரி பதவியை காலி செய்றேன் பார்" என்று ஆவேசமாக் சப்தம் போட்டார். திடுமென்று வாய்க்கு வந்த படி ஒரு பெண் பொது இடத்தில் இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டதைக் கண்டு அமைச்சரும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட அமைச்சர் போம்மா போம்மா என்று சோனாவை விரட்டினார். பின்னர் காவல்துறையினரும், கட்சிக்காரர்களும் சேர்ந்து, சோனாவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதன் பின்னணி குறித்து தெரிய வரவில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக