வேகமாக காரோட்டிய நீதிபதியொருவருக்கு அதே இடத்தில் அபராதம் விதித்து சவுதி காவல்துறை அதிகாரி கடமையைச் செய்துள்ளார்.
சவூதி அரேபிய அல்ஜவ்ஃப் - கஸீம்நெடுஞ்சாலையில் மணிக்கு 170 கி.மீ வேகத்தில் ஒரு கார்பறந்துகொண்டிருந்தது. அதைக்கண்ட போக்குவரத்துக்காவலர் ஒருவர் விரட்டிச்சென்று பிடித்துள்ளார். அதிவேகத்தில் சென்ற குற்றத்திற்காக அந்தநீதிபதிக்கு உடனடியாக நிகழ்விட அபராதமும் விதித்துள்ளார்.
அதை மறுத்த அந்த நீதிபதி, தான் நீதிபதி என்பதைச் சொல்லி, தான்இச்சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் என்று கூறியுள்ளார். எனினும் அந்தநீதிபதியை விடாமல், உடனடியாகப் பணம் கட்டச் செய்துள்ளார் அந்தப்போக்குவரத்து அதிகாரி. மேலும் சவூதி பொது பாதுகாப்பு விதிகளின்படி,போக்குவரத்து விதிகளில் தனிப்பட்ட யாருக்கும் விதிவிலக்குஇல்லைஎன்பதையும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.
இச்செய்தி அல்மதீனா அரபு நாளிதழில் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக