ஞாயிறு, ஜனவரி 01, 2012

டோனி பிளேயர் மரண செய்தியை தயாரிக்கிறது பிபிசி: தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் அதிர்ச்சியில்!


இங்கிலாந்தில் 10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர் டோனி பிளேயர். இப்போது இவருக்கு 58 வயதாகிறது. சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்றவர். டோனி தற்போது நலமாகவே இருக்கிறார். ஆனால், இவருடைய மரண செய்திக்காக பல தகவல்களை பிரபல பிபிசி செய்தி சேனல் தகவல் சேகரித்து வருகிறது. மேலும், டோனியின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து தகவல் தந்து
உதவும்படி இங்கிலாந்து எம்.பி.க்களையும் பிபிசி கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் கட்சியினர் கூறுகையில், டோனிக்கு 58 வயதுதான் ஆகிறது. அவர் பிரதமராக இருந்தபோது இதய கோளாறு ஏற்பட்டது. அது பெரிய பாதிப்பை தரவில்லை. இப்போது அவர் உடல்நலத்துடன் இருக்கிறார்.
இளைஞர் போலவே செயல்படுகிறார். அவருடைய மரண செய்திக்கு இப்போதே தகவல் திரட்டுவது மிக மோசமான செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவிக்க இயலாது என்று பிபிசி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக