புதிய வாடகை ஒப்பந்தத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் 7வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சென்னையில் இன்றுபேச்சுவார்த்தை நடக்கிறது.
தென்மாநிலங்களில்செயல்பட்டுவரும்சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும்மையங்களுக்கு எரிவாயு எடுத்து செல்ல,கூடுதலாக 600 லாரிகளுக்கு உரிமம்வழங்கப்பட வேண்டும். புதிய வாடகை ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்,என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமையல் எரிவாயு டேங்கர்லாரி உரிமையாளர்கள் இன்று 7வது நாளாக வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டன் கேஸ் ஏற்றி செல்லும் பணி தடைப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 60 ஆயிரம் டன் கேஸ் ஏற்றி செல்லும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.2.5 கோடி வீதம் ரூ.15 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
சென்னை எழிலகத்தில், இன்று நான்கரை மணி அளவில் பேச்சுவார்த்தைநடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால்,வேலை நிறுத்தம் தொடரும் என, சமையல் எரிவாயு டேங்கர் லாரிஉரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக