பாகிஸ்தான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 31 இந்திய மீனவர்களை சனிக்கிழமை கைது செய்துள்ளது அந்நாட்டு கடல் பாதுகாப்புப் படை. பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் 110 கடல் மைல்கள் தொலைவில் சிந்து கழிமுகப் பகுதியில் 14 படகுகளில் 31 இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டு கடல் பாதுகாப்புப்
படகுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய மீனவர்கள் இதுபோன்று கடல் எல்லையை அடிக்கடி தாண்டி வந்த மீன்பிடிப்பதால், பாகிஸ்தான் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய, பாகிஸ்தான் அரசுகள் வருடந்தோறும் இதுபோன்று கடல் எல்லை தாண்டி வரும் மீனவர்களைக் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2011-ம் ஆண்டில் குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் மட்டும் 122 இந்திய மீனவர்களைக் கைது செய்த பாகிஸ்தான், 23 படகுகளைப் பறிமுதல் செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக