புதன், ஜனவரி 11, 2012

கலைஞர் டி.வி-க்கு ரூ.200 கோடி லஞ்சம்: ரூ 223 கோடி சொத்து முடக்கம் !


2ஜி  அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு 5 நிறுவனங்களின் அசையா சொத்துக்களை முடக்க நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது, இதனால் 2ஜ் அலைக்கற்றை வழக்கு அடுத்த கட்டத்தினை நோக்கி சென்றுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கடன் அல்லது பங்குப் பத்திரங்கள் மூலம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து பல்வேறு நிறுவனங்களின் வழியாக, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது.


சாஹித் உஸ்மான் பல்வாவின் டைனமிக்ஸ் ரியால்டி நிறுவனத்துக்கு இந்தப் பணம் திருப்பியளிக்கப்பட்டிருக்கிறது' என்று அமலாக்கப் பிரிவின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. லஞ்சப் பணத்தை கைமாற்றி விடுவதற்காக பயன்பட்ட நிறுவனங்களுக்கு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் போலியானவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  டைனமிக்ஸ் ரியால்டி நிறுவனத்தின் ரூ. 134 கோடி, கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் ரூ. 22 கோடி, நிஹார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் ரூ. 1.1 கோடி, டி.பி. ரியால்டியின் ரூ. 52 கோடி, எவர்ஸ்மைல் நிறுவனத்தின் ரூ. 13 கோடி ஆகிய ஐந்து நிறுவனங்களின் சுமார் ரூ.222 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்க இருக்கிறது. இந்த வழக்கில் சொத்துகள் முடக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 

இது தொடர்பான அமலாக்கப் பிரிவின் உத்தரவை நிறைவேற்ற வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மோசடித் தடுப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக