கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் பிடித்துச் சென்றனர். அவர்களை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 30 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்கள்
தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.அவ்வப்போது மீனவர்களை பிடித்துச் சென்று இலங்கையில் சிறை வைப்பதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், தற்போது நாகை மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான படகில் அவருடன் மகேந்திரன், செந்தில்நாதன், அருள்செல்வன், பாகுலன், செல்லநாதன், பழனிவேல் ஆகியோரும் நம்பியார் நகரை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான படகில் அவருடன் மணிவண்ணன், முருகேசன், கரிகாலன், செல்வம் உள்ளிட்ட 7 பேரும் கடந்த 8-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் அனைவரும் நேற்றிரவு இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 2 படகுகளிலும் இருந்த 14 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது படகுகளையும் அங்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றி தகவலறிந்த நாகை மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் உடனடியாக மீட்க வலியுறுத்தி நாகை தாலுகா மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்த நாகை மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் உடனடியாக மீட்க வலியுறுத்தி நாகை தாலுகா மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அக்கரைப்பேட்டை பஞ்சாயத்தை சேர்ந்த திருவளர்ச்செல்வன் கூறுகையில், ‘‘நமது கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 பேரை இலங்கை கடற்படையினர் அத்துமீறி பிடித்துச் சென்றுள்ளனர்.
அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் திரும்பும் வரை நாகை தாலுகா மீனவர்கள் அனைவரும் மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.
ஸ்டிரைக் காரணமாக நாகை தாலுகா முழுவதும் சுமார் 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை.
ஸ்டிரைக் காரணமாக நாகை தாலுகா முழுவதும் சுமார் 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை.
புதுகை மீனவர்களும் சிறைபிடிப்பு:
புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு சொந்தமான படகில் காளிமுத்து, அர்ச்சுனன் உள்ளிட்ட 4 பேர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களின் படகில், இவர்களது படகு மோதியது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களை தாக்க முயன்றனர். பின்னர் காளிமுத்து, அர்ச்சுனனை பிடித்து வைத்துக் கொண்டு மற்ற 2 மீனவர்களையும் படகுடன் திரும்பிச் செல்லுமாறு மிரட்டியுள்ளனர். காளிமுத்து, அர்ச்சுனனை இலங்கைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
கரை திரும்பிய மற்ற 2 மீனவர்களும் இதுபற்றி கோட்டைப்பட்டினத்தில் உள்ள மீனவர்களுக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். நாகை, புதுகை மீனவர்களை இலங்கை ராணுவம் மற்றும் சிங்கள மீனவர்கள் பிடித்துச் சென்ற சம்பவம் தமிழக மீனவர்களிடையே பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக