திருவனந்தபுரம்: கர்நாடகா சிறையில் அநியாயமாக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள பி.டி.பி கட்சி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை, அவரது மகளின் திருமணத்தில் பங்கேற்க ஜாமீன் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி கேரள மாநில முதல்வர்
உம்மன் சாண்டி கர்நாடகா முதல்வர் ஜகதீஷ் ஷெட்டாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மார்ச் 10-ஆம் தேதி மஃதனியின் மகளுடைய திருமணம் நடைபெற உள்ளது. தனது திருமணத்தில் தந்தை பங்கேற்க ஜாமீன் வழங்க கோரி மஃதனியின் மகள் ஷமீரா ஜவ்ஹரா நேற்று முன் தினம் உம்மன் சாண்டிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மஃதனியின் சிகிட்சை பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், தொடர் சிகிட்சைக்கும், மகளின் கல்யாணத்தில் பங்கேற்கவும் மஃதனிக்கு ஜாமீன் அளிக்கவேண்டும் என கோரி மஃதனியின் மனைவி சூஃபியா மஃதனியும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் பி.டி.பி தலைவர்களும் முதல்வருக்கு மனு அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து உம்மன் சாண்டி, கர்நாடகா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதேவேளையில், மஃதனியின் விடுதலைக்காக கேரள அரசு தலையிடக்கோரி பி.டி.பி மாநில அளவில் நாளை தர்ணா போராட்டம் நடத்த உள்ளது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக