குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு தேசிய தலைவராவதற்கான திறமை இல்லை என்று காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
பா.ஜ.க தேசிய கவுன்சிலில் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மோடியின் கூற்று ஒரு தேசிய தலைவருக்கு உரித்தானது அல்ல. பிரதமர் ஆவதற்கான தகுதியும் மோடிக்கு இல்லை.
கோடிகளை செலவழித்து சுயமாக பிரச்சாரம் நடத்தினால் யாரேனும் தன்னை பிரதமராக்கிவிடுவார்கள் என்று மோடி கருதினால் அது தவறு என்று சுக்லா கூறுகிறார். நேற்று சங்க்மாவைக் குறித்து நல்லது கூறினார்கள். இன்று பிரணாப் முகர்ஜியைக் குறித்து பேசுகின்றார்கள். பிரணாப் முகர்ஜியின் திறமையில் நம்பிக்கையிருந்தால் ஏன் அவரை குடியரசு தலைவர் பதவிக்கான போட்டியில் ஆதரிக்கவில்லை? என்று சுக்லா கேள்வி எழுப்பினார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக