டமாஸ்கஸ்:அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதை பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான போராட்டத்தில் மேற்கத்திய நாடுகளையோ, அரபு நாடுகளையோ நம்பி சார்ந்திருக்க கூடாது என சிரியா மக்களுக்கு அல்காயிதாவின் தலைவர் என கருதப்படும் அய்மன் ழவாஹிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இணையதளத்தில் போஸ்ட் செய்த எட்டு நிமிடங்களை கொண்ட
வீடியோ செய்தியில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஆஸாத் அரசுக்கு எதிராக போராடும் சிரியா எதிர்ப்பாளர்களுக்கு உதவி அளிக்குமாறு துருக்கி, ஈராக், லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளை சார்ந்தவர்களுக்கு ழவாஹிரி அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பது: கசாப்புக்காரன் ஹாஃபிசுல் பஸ்ஸாரின் மகன் பஸ்ஸாருல் ஆஸாத் மக்களின் இரத்தத்திற்காக தாகம் எடுத்து அலைகிறார். அனைத்து வேதனைகளையும் புறக்கணித்துவிட்டு சிரியா மக்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். சிரியாவில் உள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு உதவ முஸ்லிம் உலகம் முன்வரவேண்டும். மேற்கத்திய சக்திகள் உங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதை நீங்கள் நன்றாக புரிந்துள்ளீர்கள். ஊழல்வாதிகளான அரசுகளுக்கு உதவும் அரபு லீக்கையோ, துருக்கி அரசையோ சார்ந்து இருக்காதீர்கள். நமக்கு சுதந்திரமும், நீதியும் தேவை என்றால் அரசில் இருந்து நாம் சுதந்திரமாகி, அரசுக்கு எதிராக போராடவேண்டும். சுதந்திரத்தை தவிர வேறு ஒன்றையும் கோராத புரட்சி தொடரவேண்டும். இவ்வாறு ழவாஹிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக