புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும் மத்திய தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றம், சுப்ரமணியசாமியின் குற்றச்சாட்டை மறுக்க வில்லை. சி.பி.ஐ. கொடுத்த ஆவணங்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தற்போது குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் கூட நரேந்திர மோடியை ஏற்றுக்கொள்கின்றனர் .இந்நிலையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கலைஞர், பா.ஜ.க. மதவாத கட்சி. பாபர் மசூதி மற்றும் குஜராத் கலவரங்கள் மீண்டும் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க.வை அவர் சீண்டுவது சரியல்ல..
தே.மு.தி.க சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டு இல்லை என்றால், இந்த அளவு வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லை தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க.வை மேலும் பலப்படுத்த வருகிற ஏப்ரல் மாதம் மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி – காங்கிரஸ் கட்சி ஆகியவை. தான் பிரதான கட்சிகள். வருகிற 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் வர வேண்டும் என்பது எங்கள் கருத்து. அதை தடுக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக