இராக் போரில் பங்கேற்று வீரச்செயல்? புரிந்த ராணுவ வீரர்களுக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷேல் ஆகியோர் பிப்ரவரி 29-ம் தேதி வீரர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
'இராக் போரில் பங்கேற்ற வீரர்களுக்கும், அவர்களை ஆதரித்த குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த விருந்து அளிக்கப்படுகிறது. இப்போரில் குறிப்பிடத்தக்க வீரச்செயல்? புரிந்த வீரர்களுக்கு அதிபரும், அவரது மனைவியும் விருந்தளிக்க உள்ளனர்'' என்று தெரிவித்தார்.
விருந்தில் பங்கேற்கும் வீரர்கள் சீருடையிலேயே கலந்து கொள்வார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்த முப்படைகளின் கூட்டுத் தளபதி மார்டின் டெம்ப்úஸ, இராக்கின் விடுதலைக்காக நடத்தப்பட்ட 'புதிய விடியல்'? என்ற நடவடிக்கையில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் அவர்களை ஆதரித்த குடும்பத்தினரை அங்கீகரிக்கும் வகையில், அதிபரும், அவரது மனைவியும் தேசத்தின் சார்பாக எங்களைக் கௌரவிக்கத் தரும் விருந்து இது என்று குறிப்பிட்டார்.
இந்த யுத்தத்தில் கலந்து கொண்ட வீரர்கள் அமெரிக்காவை காத்து, சுதந்திரமான, அமைதியான எதிர்காலத்தை இராக்கியர்கள் தேர்ந்தெடுக்க உதவியுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்களின் வீரத்தையும், சேவையையும் குறித்து தான் பெருமிதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இராக் யுத்தத்தில் 4,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஊனமடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக