திங்கள், பிப்ரவரி 13, 2012

நிம்மதி போச்சு – சதானந்த கவுடா அங்கலாய்ப்பு

’நிம்மதி போச்சு’பெங்களூர்:செல்ஃபோனில் ஆபாசம் படம் பார்த்த அமைச்சர்கள் விவகாரம் உள்பட சமீபகால பிரச்சனைகளால் மன நிம்மதியை இழந்து தவிப்பதாக கர்நாடகா மாநில பா.ஜ.க முதல்வர் சதானந்தா கவுடா கூறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மங்களூர் வந்த அவர் பஜ்பே விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு
பதிலளிக்கையில் கூறியது:
லோக் ஆயுக்தாவுக்கு 2-வது துணை நீதிபதியாக சந்திரசேகரய்யா நியமனம் செய்தது தொடர்பாக எனக்கு எழுதிய கடிதத்தின் பின்னணியில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம்ஜித் சென்னை சந்தித்துப் பேசியுள்ளேன். லோக் ஆயுக்தாவுக்குப் புதிய நீதிபதியை நியமிக்கும் நடைமுறையை பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்குவேன்.
முதல்வராக பதவி ஏற்ற பிறகு கடந்த 6 மாதகால ஆட்சி திருப்திகரமாக இருந்தது. செல்ஃபோனில் ஆபாச பட விவகாரம், லோக் ஆயுக்தா நியமன விவகாரம், அட்வகேட்ஜெனரல் ராஜிநாமா, லோக் ஆயுக்தா துணை நீதிபதி நியமன விவகாரம் போன்றவற்றால் கடந்த 8 நாள்களாக நடந்துள்ள சம்பவங்களால் மனநிம்மதியை இழந்து தவிக்கிறேன் எனினும், வருங்காலத்தில் இவை சீர் செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
பட்ஜெட்தயாரிப்பு: அதேபோல, 2012-13 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணியை திங்கள்கிழமை(பிப்ரவரி13)தொடங்க உள்ளேன். 16 துறைகளை நானே நிர்வகித்து வருவது பணிச்சுமையை அதிகரித்துள்ளது. விரைவில் நான் நிர்வகிக்கும் துறைகளில் சிலவற்றை வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக