
அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிப்பதாக சுப்பிரமணியசாமி கூறியிருந்தார். ஆனால் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த ஆதாரங்கள் வழக்கு போட போதுமானவையாக இல்லை என்று கூறி மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.
நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு சுப்பிரமணிய சாமி அதுபற்றிக் கூறுகையில், "சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நான் மேல் முறையீடு (அப்பீல்) செய்வேன். சிபிஐ நீதிமன்ற தீர்ப்பால் நான் ஏமாற்றம் அடைய வில்லை. மேல் முறையீட்டில் தீர்ப்பு மாறும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக