சனி, பிப்ரவரி 04, 2012

சிரியாவில் துப்பாக்கி சூட்டில் 217 பேர் பலி !

 டமாஸ்கஸ்: சிரியாவில் ஆட்சிக்கு எதிராக நடக்கும் கவலரத்தை அடக்க மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 217 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் கலவரம் நடத்தி வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பலியாகி உள்ளனர். இன்னும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று ஹோம்ஸ் நகரில் போராட்டக்காரர்கள் திரண்டனர்.

இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். டாங்கிகளும் அணிவகுத்து நின்றன. அப்போது அதிபர் ஆசாத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.

பீரங்கிகள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. அதில் 4 பல மாடி கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. இதனால் பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இச்சம்பவத்தில் 217 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமானவர்கள் சிக்கி தவிக்கின்றனர்.

எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சிரியா முழுவதும் ராணுவத்தினர் சுற்றி வருகின்றனர். 

இதனை அரச படுகொலை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக