புதன், பிப்ரவரி 15, 2012

வங்கதேச டிவியில் செய்தியாளர்களாக பணியாற்றிய தம்பதிகள் கொடூரமாக அடித்து கொலை

Bangladesh reporters couple murdered.வங்கதேச டிவியில் செய்தியாளர்களாக பணியாற்றிய தம்பதிகள் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர். வங்கதேசத்தின் மாஸ்ரங்கா டிவியில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் குலம் முஸ்தபா சரோவர்.
ஜெர்மனியின் டாய்ஷ் செய்தி நிறுவனத்தில் நிருபராக பணியாற்றி வந்த இவர் கடந்த ஆண்டு வங்கதேசம் திரும்பினார். இவரது மனைவி மெகரூன் ரூனி, ஏடிஎன் பங்களா டிவியில் சீனியர் ரிப்போர்ட்டராக பணியாற்றி வந்தார். தலைநகர்
தாகாவில் உள்ள அபார்ட்மென்டில் தங்கியிருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், இருவரையும் கொடூரமான முறையில் அடித்துக் கொன்றனர்.
முஸ்தபாவின் கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு கொலை செய்திருக்கின்றனர் என்று தெரியவந்தது. அவர்கள் அளித்த செய்தி காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. தலைநகரில் நிருபர் தம்பதிகள் அடித்து கொலை செய்யப்பட்டது வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை கண்டித்து தாகாவில் உள்ள தேசிய பிரஸ் கிளப் முன்பு பல்வேறு மீடியாக்களை சேர்ந்த நிருபர்கள், போட்டோகிராபர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொலையாளிகளை உடனே கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக