புதன், பிப்ரவரி 15, 2012

பெஷாவர் விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு வைத்திருந்த அமெரிக்க தூதரக அதிகாரி கைது !

பெஷாவர் விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது பெட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.பெஷாவரிலிருந்து இஸ்லாமாபாத்துக்கு அவர் செல்லவிருந்தார். அவரது பெட்டிகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டபோது அதில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்ட போது அந்த
நபர் தூதரக அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது. அவரது சூட்கேஸில் 6-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது பெட்டியில் கைத்துப்பாக்கியும் இருந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது www.asiananban.blogspot.com. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தை பெஷாவரில் உள்ள அமெரிக்க தூதரகம் கவனித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து அமெரிக்கா, பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. எல்லையில் அமெரிக்க படைகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அமெரிக்காவுடனான உறவு நலிவடைந்து வரும் நிலையில் சீனாவுடன் தனது உறவை வலுப்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கில்ஜித்-பல்ஜிஸ்தான் பகுதியை 50 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு விட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக