பாக்லாந்து தீவு விவகாரம் குறித்து பிரிட்டன் மீது அர்ஜென்டினா ஒரு முறையீட்டை ஐ.நா சபைக்கு அனுப்பும் என அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 1982ம் ஆண்டில் பிரிட்டனுக்கும், அர்ஜெண்டினாவுக்கும் இடையே பாக்லாந்து தீவுகள் குறித்து போர் நடைபெற்றது. இதனால் சமீபகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை அதிகரித்து வருகிறது.
சென்ற மாதம் பிரிட்டன் பாக்லாந்துக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்புவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் அத்தீவை அர்ஜெண்டினா
தனக்குரியதாக அறிவித்து வருகின்றது.
இதுகுறித்து அர்ஜென்டினாவின் ஜனாதிபதி கூறுகையில், இளவரசர் வில்லியம் விமானி ஆவதற்கு பயிற்சி பெற்றுள்ளார் எனவும், பிரிட்டன் தெற்கு அட்லாண்ட்டிக் கடலில் போர்க்கப்பலை நிறுத்துவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஐ.நா பாதுகாப்புக் குழுவிற்கும், ஐ.நா பொதுச்சபைக்கும் ஒரு முறையீட்டை அனுப்புவோம் என்றும், சர்வதேசக் சமூகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் முயற்சியாகவே பிரிட்டனின் ராணுவமயமாக்கம் தோன்றுகிறது எனவும், தன்னுடைய கடல் பகுதியில் பிரிட்டன் தனது இராணுவத்தை நிறுத்துவது தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் இளவரசர் வில்லியம் இராணுவ உடையில் அப்பகுதியில் உலாவுவதை ஏற்க முடியாது, இருப்பினும் அவர் வேறு உடைகளில் வருவதையே தாம் பார்க்க விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இருந்த போதிலும் பிரிட்டனின் வெளியுறவுத் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது, அதில் ஃபாக்லாந்து மக்கள் பிரிட்டிஷ் மக்களாகவே வாழ விரும்புகின்றனர் என்றும், அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு எனவும், அந்தத் தீவின் குடிமக்கள் விரும்பினால் மட்டுமே தீவின் அதிகாரம் குறித்து அர்ஜென்டினாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் அவ்வறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக