இலங்கையில் தஞ்சம் அடைந்த மாலத்தீவு முன்னாள் அதிபரின் மனைவிக்கு பாதுகாப்பு வழங்க அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இந்து மகா சமுத்திரத்தில் உள்ள மாலத்தீவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென புரட்சி வெடித்தது. அதையடுத்து அதிபராக இருந்த முகமது நஷீத் பதவி விலகினார். புதிய அதிபராக வாஹீத் ஹசன் பதவி ஏற்றார். எனவே புதிய அரசு தன்னை கைது செய்யும் என்ற அச்சத்தில் நஷீத்தின் மனைவி லைலா மாலத்தீவில் இருந்து வெளியேறினார். பின்னர் இலங்கையில் தஞ்சம் அடைந்தார். அப்போது அதிபர் ராஜபக்சே இலங்கையில் இல்லை. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் லைலா ராஜபக்சேயுடன் இது குறித்து டெலிபோனில் பேசினார். எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்.கே.இலங்காகூனுக்கு உத்தரவிட்டார். மேலும் பதவி விலகிய அதிபர் முகமது நஷீத்துக்கு மாலத்தீவில் பாதுபாப்பு கொடுக்கும்படி புதிய அதிபர் வாஹீத் ஹசனிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட அவர் நஷீத்துக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக