புதன், பிப்ரவரி 08, 2012

ஆமாம்! ஆபாசப்படம் பார்த்தேன்!-கர்நாடகா அமைச்சர் ஒப்புதல்

 சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும்போது ஆபாசப்படம் பார்த்தேன் அது என்ன கிரிமினல் குற்றமா? என்று கர்நாடகா அமைச்சர் லஷ்மண் சவாடி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா கூட்டுறவுத் துறை அமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான லஷ்மண் சவாடி அம்ற்றும் சி.சி. பாட்டீல் ஆகிய இரு அமைச்சர்களும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மொபைல் போனில் ஆபாசப்படம் பார்த்தது வீடியோவில் பதிவாகி வெளியானது.

"ஆம் அது புளூ பிலிம் போன்றதுதான், துறைமுக அமைச்சர் கிருஷ்ணா பாலிமர் செல்போனில் அந்தப் படம் இருந்தது. அதாவது அந்த வீடியோ படத்தில் ஒரு பெண் நடனமாடுகிறாள் அவரை 4 பேர் பலாத்காரம் செய்கின்றனர். அயல்நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் விருந்தின் போது நடைபெறுகிறது பாருங்கள் என்று என்னிடம் காண்பித்தார். சட்டப்பேர்வையில் மால்பியில் நடைபெற்ற விருந்து ஒன்று பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது நான் இந்த வீடியோவை பார்த்தேன்.

ஆம் நான் பார்த்தது உண்மைதான், ஆனால் அது என் போன் அல்ல. நான் எந்த கிரிமினல் குற்றமும் செய்துவிடவில்லை. மொபைல் என்னுடையது அல்ல வெறுமனே பார்த்தது எப்படி குற்றமாகும்.

ஆனால் சட்டப்பேறவையினுள் மொபைல் போன்கள் கொண்டு செலவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இரட்டை சர்ச்சையில் அகப்பட்டுக் கொண்டுள்ளீர்களே என்று நிருபர்கள் கேட்ட போது, லஷ்மண் சவாடி, "நான் என்னுடைய மொபைலில் பார்க்கவில்லையே, ஆனால் கிளிப்பிங்கை பார்த்தேன் மறுக்கவில்லை. சவாடி ஒருநாளும் அந்தக் காரியத்தைச் செய்யமாட்டார். நான் அதனைச் செய்யவில்லை" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக