வியாழன், பிப்ரவரி 16, 2012

சேர்பியா-இஸ்ரேல்: இரு இனவாதங்களும் இரட்டை நிலைப்பாடும் . .

gazaகடந்த செப்டம்பரில் ஐ.நா. பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட பலஸ்தீன் தனிநாட்டுக் கோரிக்கை அமைதியாக அமுங்கிவிட்டது. யூதர்கள் இஸ்ரேலில் வாழும் அறபு பலஸ்தீனர்களுக்கு எதிரான புத்தம் புதுச் சட்டங்களை நிறைவேற்றி வருவதோடுமேற்குக்கரையில் புதிய குடியேற்றங்களையும் அமைத்து வருகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என ஒபாமா கூறி வருகின்றார். "சமாதானம் என்பது மக்கள் மத்தியிலான விட்டுக் கொடுப்பில் தங்கியுள்ளது. சூடானிலிருந்து நாம் பெறும் பாடம் இதுவே. பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றே சுதந்திர நாட்டிற்கு வழிகோலும்" என்பது சமீபத்திய ஒபாமாவின் அறிக்கை. ஒபாமாவின் இக்கருத்து உணர்த்துவதென்னஅப்பழுக்கற்ற சியோனிஸ விசுவாசத்தின் உச்சியில் இருந்தவாறு ஒபாமா
விடுக்கும் இந்த அறிக்கைஇஸ்ரேலை நோக்கியே விடுக்கப்பட வேண்டும். சூடான் விட்டுக் கொடுத்தது. தென் சூடான் நாடு உருவானது. இஸ்ரேல் விட்டுக் கொடுத்தால் பலஸ்தீன் தேசம் உருவாகும்.
யதார்த்தத்தில் இவை இரண்டையும் ஒப்புநோக்கவே முடியாது. ஏனெனில்சூடான் இஸ்ரேல் போன்று அறேபியர்களின் நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட நாடல்ல. இஸ்ரேல் இங்கு செய்ய வேண்டியதும் விட்டுக்கொடுப்பல்ல. மாறாகபலஸ்தீன மக்களின் நிலங்களின் ஒரு பகுதியை மீள அளிப்பது மாத்திரமே.
ஏனெனில்இஸ்ரேலின் உருவாக்கமே சர்வதேச சட்டங்களை மீறி நிகழ்ந்த நீதிக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமான வரலாற்றுத் துரோகம். இந்தத் துரோகத்தை பல தசாப்தமாக அங்கீகரித்து வரும் அமெரிக்காவின் அறிக்கையை இதற்கு மேலும் நம்ப வேண்டியதில்லை.
கொசோவோ சேர்பியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக மாறியதை வொஷிங்டன் விழுந்தடித்துக் கொண்டு வரவேற்றது. அவ்வாறாயின் பலஸ்தீன் சுதந்திர தேசத்தை அது ஏன் அங்கீகரிக்க மறுக்கின்றது. இஸ்ரேலின் சம்மதத்துடன்தான் பலஸ்தீன நாடு உருவாக்கப்படும் என்பது முடியாத காரியமொன்றை நிகழ்த்த வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானது. சேர்பியாவின் சம்மதத்துடன்தான் கொசோவோ உருவாகவில்லை. 2008 இல் கொசோவோ தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தபோது அமெரிக்கா அதை அங்கீகரித்தது.
1389 இல் சேர்பியாவை உஸ்மானியர்கள் தோற்கடித்தனர். பல நூற்றாண்டுகளாக போல்கன் பிராந்தியம் உஸ்மானியரின் இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்தது. 1800 களில் இப்பிராந்தியத்தில் அல்பேனியர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட போல்கன் நாடுகளை ஒன்றிணைத்த யூகோஸ்லாவியாவின் கீழ் கொசோவோ,அல்பேனியாமொன்டநீக்ரோ ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டு கம்யூனிஸ அரசு உதயமானது.
1989 இல் ஸ்லோபொடன் மிலோசொவிக் கொசோவோவை சேர்பியாவுடன் இணைத்து முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படு கொலைகளைக் கட்டவிழ்த்தான். இந்த ஆக்கிரமிப்பிலிருந்து கொசோவோ தன்னை விடுவித்துக் கொள்வதற்கு சேர்பியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஓர் அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான நிறுவனங்களைப் பலப்படுத்தியதோடு தன்னை சுதந்திர நாடாகவும் பிரகடனப் படுத்தியது.
1948 இல் இஸ்ரேல் பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நான்கு அறபு-இஸ்ரேல் யுத்தங்கள் நடந்தன. அதன் பின்னர் 1978 இலிருந்து இஸ்ரேல்-பலஸ்தீன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் எதிலுமே பலஸ்தீனர்களுக்குச் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை புதிய புதிய குடியேற்றத் திட்டங்களை அங்கீகரிப்பதாகவும் இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தைத் தவிர்ப்பதாகவுமே அவற்றின் நோக்கங்கள் இருந்தன. பலஸ்தீன் தலைவர்கள் மட்டுமன்றிஅறபுத் தலைவர்களும் இப்பேச்சுவார்த்தைகளில் ஏமாற்றப்பட்டனர்.
கடந்த ஆறு தசாப்த கால சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவும் அதன் ஏனைய மேற்கத்தேய நட்பு நாடுகளும் மத்தியஸ்தம் வகித்துள்ளன. ஆனால்அதனால் பலஸ்தீனர்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை. சில அமெரிக்கத் தலைவர்கள் தாங்கள் அப்போது இஸ்ரேல் சார்பாக நடந்து கொண்டமை மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என்பதை இப்போது உணர்த்தி வருகின்றனர்.
இஸ்ரேலுக்கும் சேர்பியாவுக்கும் இடையில் கொள்கை அளவிலும் செயற்பாட்டளவிலும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. சேர்பியாவில் மிலோசொவிக் கையாண்டு வந்தது ஒரு இனவாதக் கொள்கை (Racism). ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பாக துருக்கிய உஸ்மானியர்கள் சேர்பியர்களை படுகொலை செய்ததாக அவர் குற்றம் சாட்டி வந்தார். அதற்கு பழிவாங்கும் தருணம் கிடைத்துள்ளதாக பெல்கிரேட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்.
சேர்பிய இனவாதம் போல்கனில் முஸ்லிம்களின் இருப்பை முற்றாகவே துடைத்தழிக்கும் அரசியல் பின்புலம் கொண்டது. கிழக்கு ஐரோப்பாவில் முஸ்லிம்கள் இல்லாத ஓர் இனத்தூய்மையை சேர்பிய இனவாதம் முன்னிறுத்தியது. எனவேதான் கொசோவோபொஸ்னியா,ஹெசகோவினா ஆகியவற்றுக்கு எதிரான சேர்பியப் படையினரின் தாக்குதல்கள் முஸ்லிம்களை முற்றாகவே துடைத்தழிக்கும் வகையில் நடந்தன. முஸ்லிம் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வல்லுறவுச் சம்பவங்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டன.
இஸ்ரேலை உருவாக்கிய சியோனிஸம்யூத தூய்மைவாதத்திலிருந்து மேலெழுகின்றது. அது யூதர்களே உலகில் மேன்மையான சமூகம் என்பதாகவும்அவர்களது மதபண்பாட்டுவரலாற்று ரீதியான எதிரிகள் முஸ்லிம்கள் என்பதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. யூத இனவாதமே இஸ்ரேலின் அடிப்படை அரசியல் சித்தாந்தம். அமெரிக்கத் தலைவர்கள் மத்திய கிழக்கிலுள்ள ஒரேயொரு ஜனநாயக நாடு இஸ்ரேல் எனப் புகழ்ந்தாலும்இஸ்ரேலில் யதார்த்தத்தில் நிலவுவது ஓர் இராணுவ ஆட்சியே.
4.5 மில்லியன் இஸ்ரேலியர்கள் அனைவருமே குறைந்தது இரு ஆண்டுகளேனும் கட்டாய இராணுவ சேவையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் சிவில் சமூகம் என அடையாளப்படுத்தக் கூடிய எதுவுமே இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஆயுத தாங்கிகளாகவே உள்ளனர். அறேபியர்கள் யூதர்களின் பரம எதிரிகளாகவும் கொன்றொழிக்கப்பட வேண்டியவர்களாகவும் பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் வர்ணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சேர்பிய இனவாதத்தை விட இஸ்ரேலிய யூத இனவாதம் மிகவும் குரூரமானது. இப்படியிருக்கும் தறுவாயில்பலஸ்தீன் பிரச்சினைக்குத் தீர்வு இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலமே சாத்தியம் என ஒபாமா கூறுவது அவரது அரசியல் உள்நோக்கத்தையே புலப்படுத்துகின்றது.
எல்லா ஆரம்பங்களுக்கும் நிச்சயம் ஒரு முடிவு உள்ளது. ஒபாமா மட்டுமன்றி இதுவரையான அமெரிக்கத் தலைவர்கள் இஸ்ரேல்-பலஸ்தீன் நெருக்கடியை முடிவில்லாத ஓர் ஆரம்பமாகவே பார்த்து வருகின்றனர். இதற்குக் காரணமுள்ளது. அமெரிக்காவின் ஆளும் வர்க்கமாக மாற எண்ணுகின்றவர்கள் இந்த விதியைத்தான் பின்பற்றியாக வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால்வரலாறு இதற்கு புறம்பான தீர்ப்பைத்தான் வழங்கும் என்பதை அவர்கள் ஏற்க வேண்டிய நாள் தூரத்தில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக