இலங்கையில் தமிழர்களை இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு பாரதரத்னா வழங்கவேண்டும் என்று பரபரப்பு அரசியல்வாதியான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரியுள்ளார்.
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா தேசத்தின் சிறந்துயர்ந்த மனிதர்களுக்கும், அபூர்வமாக வெளிநாட்டுக் கோமான்களுக்கும் வழங்கப்படும் ஒன்றாகும். இவ்வுயரிய விருது பெற்றவர்களில் அண்ணல் அம்பேத்கர், கர்ம வீரர் காமராஜர், மெளலானா அபுல்கலாம் ஆஸாத் போன்ற சிறந்த அரசியலாளர்களும் அடங்குவர்.
பெருமை மிக்க இந்த பாரத ரத்னா விருதை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதாக வழங்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார். தனிப்பட்ட பயணமாக இலங்கைக்குச் சென்றுள்ள சு.சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய சாமி தனது பேட்டியில்,
"விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம். அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்சே. இதனால் ராஜபக்சேவுக்கு `பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் தோல்வியடைந்திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். சு.சாமியின் இந்தக் கொடூர கருத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக