தேர்தல் நடத்தை விதிகள் நடப்பில் உள்ள இடங்களில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
குறிப்பாக சட்ட அமைச்சர் பொறுப்பு வகிக்கும் சல்மான் குர்ஷித் சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசியதை அடுத்தே அறிவிப்புகளை, இவ்வாறான பேச்சுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
"ஆனால் தேர்தல் ஆணையம் விடுத்த எச்சரிக்கையையும் மீறி சிறுபான்மையினர் உரிமைக்காக தொடர்ந்து குரல்
கொடுப்போம்" என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியுள்ளார். அவர் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கு பதிலளித்துப் பேசிய சல்மான் குர்ஷித், ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்து பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பரூக்காபாத்தில் பேசிய சல்மான், "சிறுபான்மையினர் உரிமை தொடர்பாக பேசுவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை
சிறுபான்மையினரது உரிமை பற்றி பேசினால் எனக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

சிறுபான்மை ஆதரவு நிலைப்பாட்டிற்காக என்னை தூக்கில் வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள்." என்று ஆவேசம் பொங்கக் கூறினார்
உடனடியாக, இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பல்பீர்புஞ்ச்,
"நாட்டின் சட்ட அமைச்சராக இருந்து கொண்டு அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையம் பற்றி இப்படி பேசியிருப்பது துரதிர்ஷ்டமானது" என்றார்.

மேலும், "இப்படி அரசியல் சாசன அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பேசும் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை உடனடியாக அமைச்சர் பொறுப்பிலிருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும்."
இவ்வாறு பாஜக வின் பல்பீர்புஞ்ச் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக