சனி, பிப்ரவரி 11, 2012

கடும்பனியால் ஐரோப்பாவின் டான்யூப் நதி உறைந்தது. கப்பல் போக்குவரத்து நிறுத்தம் !

Europe's Danyup river is iced. ship transport stopped.
 ஐரோப்பாவின் டான்யூப் நதியானது கடும் குளிரினால் உறைந்தது. இதுவரை குளிரினால் 460 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஐரோப்பாவில் முக்கியமான நீர் வழித்தடமாக டான்யூப் ஆறு இருந்து வருகிறது. சுமார் 2,860 கி.மீ நீளமுள்ள இந்த ஆறு செர்பியா, குரோஷியா, பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி, ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகளின் வழியாகச் செல்கிறது. மின்சார உற்பத்தி, மீன்வளம், விவசாயப் பாசனம், நகர்ப்புற குடிநீர், தொழில்நிறுவனத் தேவை ஆகியவற்றுக்கு டான்யூப் நதி பயன்படுகிறது. இந்த ஆறு உறைந்ததனால் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இன்னும் 10 நாள்களுக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறாது என செர்பிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பாவ்லே கலிகோ தெரிவித்தார்.

220 க்கும் மேற்பட்ட சிறுபடகுகள உறைந்த நீரில் சிக்கிக்கொண்டதாக பல்கேரிய அரசு தெரிவித்துள்ளது. கப்பல் போக்குவரத்துக்குத் தடையும் விதித்துள்ளது. பல்கேரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள நகரமான விடினில் மைனஸ் 28.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. கடும் பனிப்பொழிவினால் மின்சார ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பராகுவேயில் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸôக சனிக்கிழமை பதிவாகும் என்றும் ரோமில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சனிக்கிழமை கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக