திபெத்தில் தலாய்லாமா தலைமையிலான பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக திபெத்தில் சீனா நியமித்துள்ள தலைவர் பான்சென்லாமாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தற்போது
சீனாவின் ஆக்கிரமிப்பில் சுயாட்சி மாகாணமாக உள்ள திபெத்தை விடுவிக்க கோரி தலாய்லாமா தலைமையில் திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இதற்காக தலாய்லாமா சர்வதேச நாடுகளின் உதவியை நாடி வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தலாய்லாமாவை நாடு கடத்தியது. சீனாவின் சீய்ஜூவான் மாற்றும் குயீங்காய் மாகாணத்தில் வசிக்கும் திபெத்தியர்கள் தலாய்லாமாவிற்கு ஆதரவாகவும், சீனாவின் போக்கை கண்டித்து போராட்டம் தீக்குளிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்தி சீனாவிற்கு நெருக்கடி கொடுத்துவருகின்றனர். கடந்த ஜனவரி 23-ம் தேதியன்று திபெத்தியர்கள் மீது சீன போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் யாக்ஸ்ஹி ரிக்சால், 40 மற்றும் அவரது சகோதரர் ஒருவர் என இரண்டு பலியாயினர்.இந்நிலையில் திபெத் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவும் போராட்டக்காரர்கள், பிரிவினைவாத கொள்கை உடைய , தலாய்லாமா ஆதரவாளர்களை ஒடுக்க மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீனா பிரதமர் வென்ஜியாபோ, திபெத் தலைவர் பான்சென்லாமாவை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். திபெத்திற்கு எதிராக போர் தொடுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி திபெத் புத்தாண்டு பிப்.22-ல் கொண்டாட்டப்படுகிறது. அதே நேரத்தில் சீனா இத்தகைய அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக