மூலப் பொருள் ஏற்றுமதியில் சீனாவுக்கு எதிரான வழக்கில் உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மூலப் பொருள்கள் ஏற்றுமதியில் உலக வர்த்தக அமைப்பு உருவாக்கியுள்ள வழிகாட்டுதலை மீறும் வகையில் சீனாவின் செயல்பாடுகள் உள்ளதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக டபிள்யூடிஓ-வின் மேல் முறையீட்டு ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில், இரும்பு, அலுமினியம் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் ஏற்றுமதி தொடர்பாக சீனா விதிதுள்ள கட்டுப்பாடுகள் முறையற்ற வகையில் உள்ளன. இது டபிள்யூடிஓ வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும். 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் வகுத்த சமாதான தீர்வுக்கு எதிரானது என்று அமெரிக்கா கொடுத்த மனுவை டபிள்யூடிஓ ஏற்றுக் கொண்டது. அதேசமயம் சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தள்ளுபடி செய்தது. சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி ஏற்றுமதி செய்யாதிருப்பது ஏற்புடையதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்பு அமெரிக்காவில் உள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றி என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ரோன் கிர்க் தெரிவித்தார்.
பாக்ûஸட், நிலக்கரி, மக்னீசியம், மாங்கனீஸ், சிலிகான் கார்பைடு, சிலிகான், மஞ்சள் பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகிய மூலப்பொருள்களின் விலையை சர்வதேச சந்தையில் சீனா வேண்டுமென்றே உயர்த்தி விடுகிறது. ஆனால் இவை சீன சந்தையில் குறைவான விலையில் உள்ளூர் வியாபாரிகளுக்கு குறைவான விலையில் அளிக்கப்படுகிறது. இதனால் சீன வியாபாரிகள் குறைவான விலையில் பொருள்களை விற்கின்றனர். இது பிற நாட்டு தொழில்களை வெகுவாகப் பாதிக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த உலக வர்த்தக அமைப்பின் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் சீனாவின் நடவடிக்கையைக் கண்டித்தது.
இந்த வழக்கில் ஆர்ஜென்டீனா, பிரேஸில், கனடா, சிலி, கொலம்பியா, ஈக்வடார், ஜப்பான், கொரியா, நார்வே, செüதி அரேபியா, சீன தைபே, துருக்கி ஆகிய நாடுகள் தங்களையும் சேர்த்துக்கொள்ள விண்ணப்பித்திருந்தன. வழக்கில் கிடைத்த வெற்றி இந்நாடுகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக