செவ்வாய், பிப்ரவரி 14, 2012

ஆப்கானிஸ்தானில் நேட்டோ குண்டு வீச்சு: 8 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு படை  தலைமையிலான நேட்டோ நாட்டு படைகள் முகாமிட்டு உள்ளன. அவர்கள் அந்நாட்டு போராளிகளுடன் சண்டையிட்டு வருகிரார்கள் 
ஆப்கானிஸ்தானில் வடகிழக்கு மாகாணத்தில் பிரான்ஸ் படைகள் முகாமிட்டுள்ள இடத்தை நோக்கி போராளிகள்
 ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் மீது விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இதில் போராளிகளுடன்  8 குழந்தைகளும் பலியானார்கள். இதற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் ஹர்சாய் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

நேட்டோ படை தாக்குதலில் அப்பாவிகள் யாரும் பலியாகவில்லை என்று கூட்டுப்படையின் பிரிகேடியர் ஜெனரல் ஜேக்கப்சன் மறுத்தார். கடந்த பிப்ரவரி 8-ந்தேதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 குழந்தைகள் பலியான தகவல் தாமதமாக இப்போதுதான் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹாசாய் ஒவ்வொரு முறையும் நேட்டோ படைகளின் தாக்குதலை கண்டித்து வந்தாலும் அந்த நாடுகளுடனான நெருங்கிய நட்பு தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக