சனி, பிப்ரவரி 04, 2012

2ஜி வழக்கில் உரிமங்களை ரத்து செய்தது அரசுக்கு அவமானம்: மன்மோகன் சிங் !

பிரதமர் மன்மோகன் சிங் இன்று தலைமை செயலாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது: ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு இடையே பொது வாழ்வில் வெளிப்படையான, ​​பொறுப்புள்ள மற்றும் நேர்மையான முயற்சிகளை உறுதி செய்ய இன்னும் பாடுபட வேண்டியிருக்கிறது. ஊழலுக்கு எதிராக பல வழிகளில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம். இதற்கு மாநிலங்களும் இணைந்து கை கொடுக்க வேண்டும். பண இறுக்கம் மற்றும் உலக பொருளாதார சூழல் இணைந்து வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளது. எனினும், அரசு துறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம்.
 
இதனிடையே,  2008-ம் ஆண்டு வழங்கிய 122 அலைக்கற்றை உரிமங்களை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்ததால் அரசு அவமானத்தை சந்தித்துள்ளது.   மேலும் வலுவான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிகள் நடந்து வருகிறது.
 
 நாட்டின் பல்வேறு துறைகளிலும் நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். இந்த சவால்களை 5 பிரிவுகளாக பிரித்துள்ளேன். அவை வாழ்வாதாரத்தை பாதுகாப்பது, பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு.
 
இந்த சவால்களை எதிர்கொள்ள இந்த சவால்களை சரியாக புரிந்து கொண்டு செயலாற்ற வேணடும்.  அவை அனைத்தையும் எதிர்கொள்ளும் சக்தியும் திறமையும் நம்மிடம் உள்ளது. அதற்காக அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக