வெள்ளி, பிப்ரவரி 03, 2012

ஏலத்தில் கடாபியின் ரத்தக்கரை படிந்த சட்டை, மோதிரம்: விலை 2 மில்லியன் டாலர் மட்டுமே !

லிபியா:  கொல்லப்பட்ட முன்னாள் லிபிய அதிபர் கடாபியின் ரத்தக்கரை படிந்திருக்கும் சட்டையும், அவர் இறக்கும்போது அணிந்திருந்த வெள்ளி திருமண மோதிரமும் 2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்த முன்னாள் அதிபர் கடாபி போராட்டக்காரர்களால் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி லிபிய
பாலைவனப் பகுதியில் கொல்லப்பட்டார். அவரது உடலைப் பார்க்க மக்கள் பேரார்வம் காட்டினர். இந்நிலையில் கடாபியின் ரத்தக் கரை படிந்திருக்கும் சட்டையும், இறக்கும்போது அவர் அணிந்திருந்த வெள்ளி மோதிரமும் லிபியாவைச் சேர்ந்த அகமது வார்பாலி என்பவருக்கு கிடைத்துள்ளது.


அதை அவர் 2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விட்டுள்ளார். இதுவே இந்த ஏலம் ஐரோப்பாவில் நடந்திருந்தால் இன்னும் அதிக பணம் கேட்டிருப்பேன் என்று வார்பாலி தெரிவி்ததுள்ளார்.

இந்த ஏலம் குறித்து தகவல் அறிந்த பலர் பேஸ்புக்கில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்த மோதிரம் கடாபியுடையதே கிடையாது. அது லிபிய மக்களின் பணம். எனவே, அந்த மோதிரத்தை ஏலத்தில் விடக்கூடாது என்று ஒருவரும், மோதிரத்தை விற்காவிட்டால் கடாபியின் மகன் சைபை 20 பில்லியன் டாலருக்கு விற்கலாமே என்று இன்னொருவரும் தெரிவித்துள்ளனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக