வியாழன், பிப்ரவரி 09, 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 122 உரிமங்கள் ரத்து: எடிசலட் நிறுவனம் முதலீட்டை திரும்ப பெறுகிறது

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 122 உரிமங்களை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த எடிசலட் நிறுவன பங்குதாரர் இந்தியாவில் முதலீடு செய்த 820 மில்லியன் டாலர் முதலீட்டை சேத கட்டணமாக திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
 
மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து தொழில் துறைகளிலும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாகவும் இந்திய தொலை தொடர்பு சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக