உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அன்னா ஹாசாரே புனேயிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வலிமையான லோக்பாலுக்காக மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னா ஹஸாரே, இரண்டாவது நாளே உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து உண்ணா விரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.
எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் ஆதரவு உண்ணாவிரதப் போராட்டத்திற்குக் கிடைக்காததாலேயே அன்னா ஹஸாரே போராட்டத்திலிருந்து பின்வாங்கியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தானேயிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அன்னா ஹஸாரே திடீரென சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அன்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அன்னா ஹசாரேவின் உடல்நிலையில் பிரச்சனையேதுமில்லை எனவும் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும், அன்னா ஹஸாரே சுமார் 5 நாட்களாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளதாகவெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக