இலங்கையின் 64வது சுதந்திர தினம் பிப்ரவரி 4ம் தேதி வருகிறது. இதை இலங்கையில் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். அதேபோல தமிழகத்திலும் இதைக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம்.
இதுவரை தமிழகத்தில் இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி வெளியில் இலங்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதில்லை. அங்கேயும் கூட மிகவும் எளிமையான முறையில்தான் சத்தம் போடாமல் கொண்டாடுவது வழக்கம். காரணம், விடுதலைப் புலிகள் குறித்த பயம். ஆனால் இதை தற்போது தமிழகத்திலும் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனராம். சிங்கள புத்த பிக்குகள் நிறைந்துள்ள மகா போதி சபையுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளில் இலங்கை துணைத் தூதரகம் இறங்கியுள்ளதாம்.
இந்த கொண்டாட்டத்தில், இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. புத்த பிக்குகள், இந்தியாவில் வசித்து வரும் இலங்கையர்கள் திரளாக கலந்து கொள்ளப் போகிறார்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக