இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு சக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் சிங்களத்தில் உரையாற்றினார். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் நாட்டில் புழக்கத்தில் பயன்படுத்துகின்றமை மூலம் பாரபட்சங்களை ஒழிக்க முடியும் என்கிற அரசின் நீண்ட கால திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற வைபவம்தான் இடம்பெற்று இருந்தது.
பிரதம விருந்தினராக பங்கேற்ற கலாம் சிங்களத்தில் உரையைத் தொடங்கினார்.
இவர் சிங்கள சொற்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வைத்துத்தான் பேசி இருந்தார்.
இவரது சிங்களப் பேச்சு சபையோருக்கு புல்லரிப்பை ஏற்படுத்தி இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக