ஞாயிறு, ஜனவரி 15, 2012

ஜேர்மனியை விட்டு வெளியேறியது அமெரிக்க இராணுவம் !


மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆசியாவுக்கும் தன்னுடைய படைகளை அனுப்ப வேண்டி இருப்பதால் ஜேர்மனியில் இருந்த தன்னுடைய படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றது.இந்நிலையில் 10,000 முதல் 15,000 இராணுவ வீரர்கள் முதற்கட்டமாக கிளம்புவர். அமெரிக்காவின் நான்கு இராணுவக் குழுக்களில் மூன்று ஜேர்மனியில் உள்ளது.இதில் பல்லாயிரக்கணக்கில் வீரர்கள் உள்ளனர். இன்னொரு குழு இத்தாலியில் உள்ளது. ஒவ்வொன்றாக
சுழற்சிமுறையில் ஐரோப்பாவிலிருந்து புறப்படும் என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலர் பனேட்டா கூறினார்.
இங்கிருந்த பலர் சமீபத்தில் ஆப்கானிஸ்தானிற்கும், ஈராக்கிற்கும் சென்று விட்டனர். இருப்பவர்களில் சிலரும் இனி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று விடுவர் என்றார் பனேட்டா.
ஜேர்மனியில் மட்டும் முப்படைகளைச் சேர்ந்த 80,000 பேர் இருக்கின்றனர். ஆரம்பத்தில் 200,000 பேர் ஐரோப்பாவில் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
பிரிட்டனும் ஜேர்மனியில் இருக்கும் தங்களுடைய 20,000 இராணுவ வீரர்களை எதிர்வரும் 2015ஆம் ஆண்டிற்குள் தன்நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக