ஜார்கிராம் : மேற்கு வங்காளத்தில் ஜங்கல்மகாலில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இங்கு வசிக்கும் அப்பாவி மக்களை அடிக்கடி அவர்கள் கொன்று வருகின்றனர். விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இங்கு நடைபெற்ற விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் 4 நக்சலைட்கள்
சரணடைந்தனர். பின்னர், விழாவில் மம்தா பேசியதாவது:
ஜங்கல்மகால் மக்கள் நக்சலைட்களின் மிரட்டலுக்கு பயப்பட கூடாது. இந்த பகுதியில் அரசு செய்து வரும் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நான் யாருக்கும் பயப்படவில்லை. பல போராட்டங்களை சந்தித்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். நான் எப்போதுமே ஏழைகளின் பக்கமே இருப்பேன். என்னை யாராவது கொல்ல விரும்பினால் சுட்டுத் தள்ளுங்கள். அதற்காக பயப்பட மாட்டேன்.
ஜங்கல்மகாலில் நக்சல்கள் ஆதிக்கம் தலைதூக்கிய பிறகு, எந்த முதல் வரும், அமைச்சரும் இரவில் இங்கு தங்கியது கிடையாது. ஆனால், 7 மாதங்களில் இந்த பகுதிக்கு நான் 7 முறை வந்துள்ளேன். இங்குள்ள சூழ்நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்பதற்காகவும், இந்த இடத்தின் அழகை ரசிக்க வேண்டும் என்றும் விரும்பியதால் இரவில் கூட தங்கினேன். இந்த பகுதிக்கும், மாநிலத்தின் மற்ற பகுதிகளின் வளர்ச்சிக்கும் எதையுமே செய்யாதவர்கள் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பொறாமை காரணமாக எங்கள் அரசுக்கு எதிராக வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இவ்வாறு மம்தா பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக