புதன், ஜனவரி 11, 2012

நடேசன் மீது தாக்குதலை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் !

மகிந்தரின் தங்கை கணவர் நடேசன் பரிகார பூஜை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை ராமேஸ்வரம் சென்றிருந்தார். இச் செய்தி பரவியதால் மதிமுக வினரும் நாம் தமிழர் அமைப்பினரும் அவரை அங்குள்ள கோயில்களில் எல்லாம் தேடிவந்தனர். இந் நிலையில் மேல்வாசல் பகுதியிலுள்ள அர்ச்சகர் அனந்த தீட்சிதர் வீட்டில் நடேசன் சார்பில் பரிகார பூஜை நடப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கே திரண்ட இவர்கள் நடேசன் மீதும் தீட்சிதர் மீதும் தாக்குதல் நடத்தினர். நடேசன் மீது செருப்பை எறிந்தும் பலர்
தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இதனை அறிந்த நகர இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடேசனை மீட்டனர்.

இது இவ்வாறிருக்க இச் சம்பவத்துக்காக இனி இலங்கை கடற்படையினர் தமிழ மீனவர்களை தான் பழிவாங்குவார்கள் என்ற கருத்தும் கரையோரப்பகுதிகளில் மேலோங்கியுள்ளது. நடேசன் மீதான தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுக அலுவலகம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் சங்கங்களின் தலைவர்கள் போஸ், தேவதாஸ், எமரிஸ், ஜேசு, சகாயம், இருதயம் உட்பட 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக