திங்கள், ஜனவரி 02, 2012

அர்ஜென்டினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற மாகாண ஆளுநர் சுட்டுக்கொல்லப்பட்டார் !



அர்ஜென்டினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற மாகாண ஆளுநர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் ரியோநெக்ரோ மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் கார்லோஸ் சோரியா(61). நேற்று முன்தினம் புத்தாண்டு என்பதால் தனது மனைவியுடன் புத்தாண்டினை கொண்டாட ஜெனரல்ரூக்கா நகரில் உள்ள
தனது வீட்டில் முக்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சம்பவத்தன்று உள்நாட்டு நேரப்படி இரவு 8 மணியளவில் அவரது படுக்கையறையிலிருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கவே அறையில் சென்று பார்த்த போது அவரது தலையில் குண்டுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கார்லோஸ் சோரியாவின் மனைவி சுஸானாபெர்ரிடோஸிடம் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஆளுநர் கார்லோஸ்சோரியா ஆளும் பெர்னோஸிட் தேசிய கட்சி சார்பில் கடந்த ஆண்டு(2011) டிசம்பர் 10ம் திகதி தான் ரியோநெக்ரோக மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆளுநராக பதவியேற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக