திங்கள், ஜனவரி 02, 2012

இந்தோனேஷியாவின் வடபகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!


இந்தோனேஷியாவின் வடபகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 5.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சுமத்ரா தீவில் பந்தா அசே பகுதிக்கு தென்மேற்கில் 160 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையை ஒட்டியுள்ள கட்டடங்கள் குலுங்கின. இதன் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி
எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படும் என்பதால் சிறிது நேரம் பரபரப்படைந்த மக்கள் அதன் பின் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு சுமத்ரா தீவில் ரிக்டர் அளவுகோலில் 9.9 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டு 2,20,000 மேற்ப்பட்ட மக்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக