திங்கள், ஜனவரி 02, 2012

திஹார் ஜெயிலில் ராசாவுக்கு புத்தாண்டு சாப்பாடு : பன்னீர், கீர், ஹல்வா


புது தில்லி : திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 2 ஜி புகழ் ராசா மற்றும் காமென்வெல்த் போட்டிகள் புகழ் சுரேஷ் கல்மாடி ஆகியோருக்கு இன்று புத்தாண்டு சாப்பாடாக ஸ்பெஷல் சாப்பாடு கொடுக்கப்பட்டது.
இவ்விரு வி.ஐ.பி சிறைகைதிகளுக்கும் இன்று புத்தாண்டு என்பதால் அவர்களின் குடும்பத்துடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டதுடன் சக கைதிகளை வாழ்த்தவும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு இனிப்புகள் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது.
இன்று மதிய சாப்பாடு ஸ்பெஷல்
உணவாக பன்னீர், கீர் மற்றும் ஹல்வா ஆகியவை ராசா மற்றும் கல்மாடிக்கு வழங்கப்பட்டது. திஹார் ஜெயிலில் உள்ள 12,000 கைதிகளுக்கும் இச்சலுகை வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராசா 2 ஜி ஊழல் விவகாரத்திலும் கல்மாடி காமென்வெல்த் ஊழல் விவகாரத்திலும் கைது செய்யப்பட்டு திஹாரில் இருக்கிறார்கள் என்பது அறிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக