புதன், ஜனவரி 04, 2012

சீனாவில் மசூதி இடிப்பு பிரச்சினை முஸ்லிம்கள்-காவல்துறையினர் மோதல்


பெய்ஜிங், ஜன.4- சீனாவில் வடமேற்கு பகுதியில் நிங்ஷியா மாகாணத்தில் உள்ள தாஷான் என்ற கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் புதிதாக மசூதி ஒன்றை கட்டினார்கள். இது அனுமதியின்றி கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதிகாரிகள் இடிக்க முயன்றனர். இதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நூற்றுக்கணக்கானோர் திரண்டு தடுக்க முயன்றதால் காவல்துறையினருக்கும்,
முஸ்லிம்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வெடித்தனர். இந்த கலவரத்தில் 5 முதல் 10 பேர் உயிர் இழந்து விட்டதாக கிராமவாசிகள் கூறியதாக சீன பத்திரிகை தகவல் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக