வியாழன், ஜனவரி 19, 2012

தமிழக அரசின் நிவாரணத்தில் நிறைவில்லை: எஸ்.எம்.பாக்கர் !

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளில் இன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) அமைப்பின் சார்பில் தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் 100 குடும்பத்தினர்களுக்கு நிதியுதவி வழங்கினார்., " குடும்ப அட்டைகளை அடிப்படையாக கொண்டே அரசின் நிவாரணம் வழங்கப்படுவதால், மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி  இருக்கும் மக்கள் குடும்ப அட்டை இல்லை என்கிற காரணத்தால் நிவாரணம் பெற முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் புயலால்  பாதிக்கப்படாத
மக்களும் நிவாரணம் பெற்று செல்கிறார்கள்.

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் தானே புயல் நிவாரணம் மன நிறைவளிக்கவில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகள் அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. அப்பகுதிகளை ஊரிலுள்ள வசதியானவர்கள் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி செயலாளர் யூனுஸ் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் ஹமீது கவுஸ்,நஸ்ருத்தீன், எஹ்யா மரைக்காயர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.முன்னதாக கடலூர் முதுநகர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் நிவாரண உதவிகளை எஸ் எம். பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வழங்கினார். மொத்தம் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று 350 குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக