
புதுடெல்லி:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் இந்திய வருகையை தடைச்செய்ய இயலாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 65 வயதான ருஷ்டியிடம் அரசு இந்திய வம்சாவழியை சார்ந்தவர்களுக்கு அளிக்கும் ஃபெர்ஸன் ஆஃப் இந்தியன் ஆரிஜின்(பி.ஐ.ஒ) கார்டு இருக்கிறது. இத்தகைய கார்டை வைத்திருப்பவர்களுக்கு இந்தியாவுக்கு வர விசா தேவையில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பி.ஐ.ஒ கார்டை உபயோகித்து ருஷ்டி முன்னரும் பல தடவை இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆகவே இனி வரும் நாட்களிலும் அவருடைய சுற்றுப் பயணங்களை தடுக்க மத்திய அரசு தயாராகாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, தனது சுற்றுப்பயணத்தை அனுமதிக்க கூடாது என தாருல் உலூம் தேவ்பந்த் துணைவேந்தரின் கோரிக்கை நிலைக்காது என ருஷ்டி கூறியுள்ளார். இந்தியாவுக்கு செல்ல தனக்கு விசா தேவையில்லை என இதுத்தொடர்பான விவாதங்களுக்கு ருஷ்டி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய ருஷ்டி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கான விசாவை ரத்துச் செய்யவேண்டும் என தாருல் உலூம் தேவ்பந்த் துணைவேந்தர் நுஃமானி கோரிக்கை விடுத்திருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக