வியாழன், ஜனவரி 12, 2012

ஜெயலலிதா குறித்த அவதூறு - நக்கீரன் மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட உத்தரவு !


'மாட்டுக் கறி உண்ணும் மாமி நான்'' என்று நக்கீரன் இதழில் வெளியான செய்தியை அடுத்து நக்கீரன் அலுவலகத்தை அடித்து நொறுக்கியும் நக்கீரன் இதழ்களை எரித்தும் வன்முறையில் ஈடுபட்டனர் அதிமுகவினர். நக்கீரனில் வெளியான அவதூறு செய்தியை அடுத்து ஜெயலலிதா நக்கீரன் கோபால் மற்றும் காமராஜ் மீது ஜெயலலிதா நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.  நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெருமாள் முதல்வர் குறித்த செய்தியை திரும்பப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டு நக்கீரன் பத்திரிக்கையில் மன்னிப்பு செய்தி வெளியிடத் தயார் என்று தெரிவித்தார். முதல்வர் தரப்பில் ஆஜரான நவநீத கிருஷ்ணன் முதல்வர் குறித்த அவதூறு செய்தி முதல் பக்கத்திலே தான் வந்தது. அது போன்றே மன்னிப்புச் செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.

வெளியாகும் அடுத்த இதழில் முதல் பக்கத்தில் மன்னிப்புச் செய்தி வெளியிட வேண்டும் என்று  தலைமை நீதிபதி தெரிவித்த போது இதழ்கள் அச்சடிக்கப் பட்டு முடிந்து விட்டன என்று நக்கீரன் வழக்கறிஞர் தெரிவித்தார்.

மின்சாரம் இல்லாத நிலையில் இதழ்கள் அச்சடிக்கும் பணி எப்படி முடிந்தது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அச்சடிக்கப் பட்டு முடிந்து இருந்தாலும் அதை மாற்றி விட்டு மன்னிப்பு செய்தியை முதல் பக்கத்தில் பிரசுரிக்கக் வேண்டும் என்று உத்தரவிட்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக