டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்துவிட்ட நிலையி்ல் வரும் 24ம் தேதி நடக்க உள்ள கடைசிப் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட இந்திய வீரர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் நேற்று அடிலெய்ட் வந்திறங்கிய பெரும்பாலான இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாமல் ஷாப்பிங் செய்யப் போய் விட்டனர்.
இருப்பினும் லட்சுமன் மட்டும் பயிற்சியில் ஈடுபட்டார். 3 டெஸ்ட் போட்டிகளிலும் லட்சுமன் சரியாக ஆடாததால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார். அவரை நீக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் அவர் மட்டும் பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன் டிராவிட், சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், அணியின் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.
4வது போட்டியிலாவது ஆறுதல் வெற்றிப் பெறும் வகையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாமல் ஷாப்பிங் சென்றது மீண்டும் விமர்சனத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக