ஞாயிறு, ஜனவரி 01, 2012

ரூ.40,000 கோடி கடன் திரட்ட மத்திய அரசு முடிவு !

Pranab Mukerjeeஎதிர்பார்த்த அளவிற்கு வரி வருவாய் கிடைக்காததையடுத்து, நீண்ட கால பத்திரங்களை விற்று சந்தையில் இருந்த ரூ.40,000 கோடிக்கு நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது மட்டுமின்றி, குறைந்த கால கருவூலப் பத்திரங்களை விற்று மேலும் ரூ.65,000 கோடி நிதித் திரட்டவும் நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதன் மூலம் சந்தையில் இருந்து பெறும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி நிதி திரட்ட வேண்டிய
நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 5 இலட்சம் கோடி ரூபாய் கடன் பத்திரங்களின் மூலம் நிதி திரட்டியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சந்தையில் வாங்கும் கடன் அளவு 4.6% என நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி 5.5% கடந்துள்ளது.

நிதியமைச்சகம் கடன் திரட்ட விற்கும் நீண்ட கால பத்திரங்களுக்கு 8.79% வட்டி தருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் சந்தையில் இருந்து திரட்டும் கடன் கடந்த ஆண்டை விட 25% கூடுதலாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு சந்தையில் இருந்து பெறும் கூடுதல் கடன் பங்கு சந்தைகளில் எதிர்மறையாக வினையாற்றும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக