செவ்வாய், ஜனவரி 17, 2012

அமெரிக்க புதிய சட்டமூலங்களின் எதிரொலி - விக்கிபீடியா 24 மணிநேரம் முடக்கம் !

அமெரிக்கா அரசினால் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள Protect IP Act (PIPA, the Senate bill), Stop Online Privacy Act (SOPA, the House Bill) ஆகிய சட்ட நடைமுறைகளுக்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக பிரபல இணையத்தளமான விக்கிப்பீடியாவை நாளை முதல் (புதன்) 24 மணிநேரம் முடக்குவதாக அறிவித்துள்ளார் அதனது ஸ்தாபகர் ஜிம்மி வேல்ஸ். இந்தச் சட்டமூலங்களினால்  பேச்சு உரிமை பாதிக்கப்படுவதுடன் இணையத்தளங்களையும் அது முடக்குமென தெரியவருகின்றது.

விக்கிப்பிடீயாவின் இந்த முடிவினால் அத்தளத்திற்கு வருகை தரும் 25 மில்லியன் பாவனையாளர்கள் பாதிக்கபடுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இச்சட்டமூலங்களுக்கு எதிராக ஏனைய பிரபல தளங்களும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக