வெள்ளி, ஜனவரி 13, 2012

இந்தியாவில் போலியோ இல்லாத ஆண்டு 2011: ஐ.நா !


இந்தியாவில் 2011-ல் ஒரு குழந்தை கூட 'மிகத் தீவிரமான போலியோ'வால் பாதிக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது. இது, போலியோவுக்கு எதிரான விழிப்பு உணர்வு பிரசாரத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது.
வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "இந்தியாவின் மகத்தான சாதனையின் மூலம் உலக அளவில் போலியோவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது
", என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக 'போலியோ இல்லா ஆண்டு' என்ற சாதக நிலை ஏற்பட்டுள்ளதற்கு, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட உலகின் முக்கிய அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் கூறுகையில், "பொது சுகாதாரத்தில் மிகப் பெரிய சாதனை," என்று இந்தியாவிற்குப்  புகழாரம் சூட்டினார்.

இது குறித்து பில் அண்ட் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் பில்கேட்ஸ், "போலியோவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில், இது ஒரு மிகப் பெரிய மைல்கல், இந்தியாவிலுள்ள குழந்தைகள் இப்போது போலியோ பாதிப்பில் இருந்து காக்கப்பட்டுள்ளனர். உலகில் உள்ள எல்லா குழந்தைகளும் காக்கப்படுவதற்கான இலக்கின் அருகில் இருக்கிறோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ”இந்தியாவின் இந்த மகத்தான சாதனைக்காக, பிரதமர் மன்மோகன் சிங், சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க முதல்வர்களுக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த வெற்றிக்கு இந்திய அரசின் கடின உழைப்பு, உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும் முக்கியக் காரணம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக