பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் இம்ரான்கான். தற்போது இவர் பாகிஸ்தான் தெக்ரிக்-இ -இன்சாப் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தீவிர அரசியலிலும் ஈடுபட்டுள்ள அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் கட்சி அலுவலகம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.மேலும் பல நகரங்களில் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட உள்ளது. அதில் பங்கேற்று பேச உள்ள அவருக்கு பாதுகாப்பு அவசியமாகிறது. எனவே அவருக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் குண்டு துளைக்காத கருப்பு நிற “பிராடோ” ஜீப் வாங்கப்பட்டுள்ளது.
அது கட்சி பணத்தில் இருந்து வாங்கப்படவில்லை. அதை அவர் சொந்த பணத்தில் இருந்து வாங்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை வாங்கப்பட்ட அந்த ஜீப் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இந்த தகவலை தலைவர் அஷார் தாரிக் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக