வெள்ளி, மார்ச் 01, 2013

! அப்சல்குரு உடலை தரகோரி காஷ்மீரில் இன்று கடைகள் அடைப்பு !

காஷ்மீர் மார்ச்:1 பாராளுமன்ற தாக்குதலுக்கு காரணம்  அப்சல்குரு தான் என கருதி  கடந்த மாதம் 9-ந் தேதி தூக்கில் போடப்பட்டார் . அவரது  உடல் டெல்லி திகார் ஜெயிலுக்கு உள்ளேயே புதைக்கப்பட்டது. அப்சல்குரு உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரின்  குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத்திய அரசு அதை ஏற்கவில்லை.

இதையடுத்து அப்சல் குரு உடலை, அவர்  குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆளும் தேசிய மாநாட்டு கட்சி பிரதமருக்கு கடிதம் எழுதியது. காஷ்மீரில் உள்ள எல்லா கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறன்றன. இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி, பிரிவினை வாத அமைப்பான முத்தாகித மஜ்விஸ்-இ-முசாவரத் உள்பட சில அமைப்புகள் அப்சல்குரு உடலை தரக் கோரி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான அலுவலகங்கள் இன்று இயங்கவில்லை. தனியார் வாகனங்கள் மட்டும் ஓடின. முழுஅடைப்பு போராட்டத்தை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாகன சோதனையும் தீவிரமாக நடந்தது. ஸ்ரீநகரில் துணை நிலை ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக