இதற்குப் பதிலளித்த பனெட்டா,"இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என இஸ்ரேல் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது. அதுகுறித்த அமெரிக்காவின் கவலையைத் தான் நான் வெளியிட்டுள்ளேன்' என்றார்.
இந்நிலையில், நேற்று ஈரான் மக்கள் மத்தியில் உரையாற்றிய அந்நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஈரானை மிரட்டுவதோ, தாக்குவதோ அமெரிக்காவுக்கு அபாயமாகத் தான் விடியும். பொருளாதாரத் தடைகளால் ஈரானின் அணுசக்தி முன்னேற்றத்தை தடுக்க முடியாது. பொருளாதாரத் தடைகள் மற்றும் போர் ஆகிய மிரட்டல்களுக்கு பதிலடியாக நாங்களும் எங்கள் பாணியில் மிரட்டலை அமல்படுத்த வேண்டி வரும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக